சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-


தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்திற்கான இரண்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக அரசு நியமிக்கும் வகையில் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சிகளிலும் மாவட்ட ஊராட்சிகளிலும் ஒலிக்க தேவையான முயற்சிகளை மசோதாக்கள் மூலமாக சட்டமாக்கியுள்ளது. மன மகிழ்வை தருகிறது மேலும் இச்சட்டம் நடைமுறைக்கு வரும்பொழுது நகரப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், கிராம பஞ்சாயத்துகளில் 12913 நபர்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 388 நபர்களும், மாவட்ட ஊராட்சிகளில் 37 நபர்களும், அரசின் மூலமாக நியமிக்கப்பட இருப்பது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் ஆனது என்ற தத்துவத்தை மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தி வருகிறது.  

அனைவருக்குமான அரசு எனக் கூறி இஸ்லாமியர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பலி வாங்கி வரும் ஒன்றிய அரசிற்கு வழிகாட்டியாக அனைவருக்குமான அரசு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு முன்னுதாரணத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் தமிழக அரசும் ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றுத்திறனாளிகள் மசோதாவிற்கு இஸ்லாமிக் பெஃடரேஷன் ஆப் தமிழ்நாடு ஐ.எஃப்.டி. சார்பாகவும், என் சார்பாகவும் எங்களது வாழ்த்துக்களையும், மாற்றுத்திறனாளிகளின் குரல் அனைத்து மன்றங்களிலும் ஒலிக்கதொடர்ந்து எங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதையும் என்றும் உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருப்போம் என்பதையும் இக்கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.