தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்தில், தென்தமிழகத்தில் தனித்துவமாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ குருமகாலிங்கேஸ்வரருக்கு ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
காலை வேளையில் குருமகாலிங்கேஸ்வரரும் நந்தியும் பால், தயிர், பன்னீர், இளநீர், புஷ்பம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம்செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா தீபாராதனை, யாகம், மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வம் மற்றும் வளம் பெருகிடவும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விழா நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வழிபாடுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா – பருவமழை செழித்து விவசாயம் வளமுடன் சிறப்பாக நடைபெற வேண்டி பிரார்த்தனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ செக்காரக்குடியில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் – 56 பேர் மனு அளித்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026