விடுதலைக் களம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வரும் மார்ச் 15ஆம் தேதி ராசிபுரம் அண்ணாசாலை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் தலைமை வகிக்கிறார்.


கூட்டத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடு, தேர்தல் பணிகள் மற்றும் அமைப்புச் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.


இதனால் மாநிலம் மற்றும் மாவட்டங்களிலுள்ள அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.