தூத்துக்குடி – எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ஏவிஎம் ஆயில் மில்லில் இன்று காலை டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் சில பகுதிகள் சேதமடைந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தொழிற்சாலையின் நிறுவனர் சங்கர் மாரிமுத்துவை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து விரிவாக விசாரித்து, ஏற்பட்ட சேதம் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து தகவல் பெற்றனர்.