இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 15-வது ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 1201ம் ஆண்டு விஸ்வாவசு வருஷம், தை மாதம் 24-ஆம் தேதி (07.02.2026) சனிக்கிழமை, சித்திரை நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள், கும்ப லக்னத்தில் தேவியின் திருவருள் துணையுடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம் வருஷாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சி நிரல் காலை 8.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, விநாயகர் அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், விமான அபிஷேகம், வருஷாபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகின்றன.
மேலும், விழாவை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் தங்களது சுற்றத்தாருடன் கலந்து கொண்டு அருள்மிகு வீரசக்கதேவியின் திருவருளையும் அருட்பிரசாதத்தையும் பெற்றுச் செல்லுமாறு ஆலயக் குழு சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழா ஏற்பாடுகளை அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு பாஞ்சாலங்குறிச்சி சிறப்பாக செய்து வருகிறது. செயலாளர் M. ஆதிசங்கர் 99941 69917, பொருளாளர் P. வரதராஜப் பெருமாள் 98942 94330
தூத்துக்குடி
பாஞ்சாலங்குறிச்சியில் அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 15-வது ஆண்டு வருஷாபிஷேக விழா – பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுயநல அரசியல் புகாரால் நிறுத்தப்பட்ட பேருந்து நிலையப் பணி! 32 பஞ்சாயத்து மக்களின் போக்குவரத்து கனவு தடைபடுகிறதா?
அடுத்த
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் வாழ்த்து பெற்றார் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.எம். சகாயராஜ்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026