தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.எம். சகாயராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப் பெருந்தகை அவர்களை இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.