தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஒவ்வோர் மாதமும் அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாளில் நடைபெறும் வழிபாட்டின் ஒரு பகுதியாக, இம்மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு உள்ளிட்ட அபிஷேகங்கள் அர்ச்சகர்களால் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹா காலபைரவர் பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார். ஸ்ரீசித்தர் பீட சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் வாழ்க்கையில் கடன்தொல்லை, எதிரித்தொல்லை நீங்கி செல்வ வளம் பெருக வேண்டி மஹா யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பீர்க்கும் பவனியாக பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
“மகா காலபைரவருக்கு மஞ்சள் அபிஷேகம் – பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தரம் தாழ்ந்தது!” — தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கடும் கண்டனம்!!
அடுத்த
“புனிதர்களின் நம்பிக்கைச் சாட்சி — தூத்துக்குடி மறைமாவட்டம் முழுவதும் நினைவேந்தல் விழா”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026