தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி தமிழ்த்துறையும், தூத்துக்குடி புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து “புத்தக வாசிப்புத் திருவிழா” எனும் சிறப்பான நிகழ்வை இன்று (26.03.2026, வியாழக்கிழமை) சிறப்பாக நடத்தின.


இவ்விழாவில், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “சோற்றுக் கணக்கு” சிறுகதைப் புத்தகம் மாணவிகளின் வாசிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவிகள் அந்த நூலை வாசித்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


நிகழ்ச்சியை தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அருட்சகோதரி ஆ. மரிய சாந்தி வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்னான்டோ தலைமையேற்று நிகழ்வை வழிநடத்தினார்.


சிறப்பு விருந்தினர்களாக வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று ஆராய்ச்சித் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி நுண்கதிர் துறை பேராசிரியர் மருத்துவர் புளோரா நெல்சன் கலந்து கொண்டு, மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமளித்தனர்.


மேலும், ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் சுதாராணி மற்றும் கல்லூரி தலைமை நூலகர் முனைவர் வினிதா வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை முனைவர் ந. சண்முகவடிவு (எ) சாந்தி, முனைவர் அ.ம. சோனல், முனைவர் சே. ஜெயசெல்வி, முனைவர் ச. அருள் ஜோஸ்பின், முனைவர் அருட்சகோதரி மி.சு. எழிலரசி, முனைவர் பி. லதா, முனைவர் பி. செல்வ மேரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


திருமதி நவரெத்தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றியுரை தெரிவித்தார். இந்த வாசிப்புத் திருவிழாவில் சுமார் 100 மாணவிகளுக்கு “சோற்றுக் கணக்கு” நூல் வழங்கப்பட்டு, வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தினர் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.