சமூக சேவையிலும், இளைஞர் ஒருங்கிணைப்பிலும் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வரும் எம். ஆதி (ஆனந்த் பாண்டியன்), வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை மூலம் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இளைஞர்களை இணைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு, ஆதரவற்றோருக்கு உதவி போன்ற பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் (தனி) அல்லது விளாத்திகுளம் (பொது) தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளராக களம் காண முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அறக்கட்டளை நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிகமாக இருப்பது தனது தேர்தல் பயணத்திற்கு வலுவாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“மாற்று அரசியல்… மாற்றத்தை உருவாக்கும் சிந்தனை…” என்ற கோஷத்துடன் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள அவர், சமூக முன்னேற்றத்திற்காக பொதுமக்கள் அனைவரும் தங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.