மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் 2ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை இணைந்து “போதைக்கு மாற்று விளையாட்டு” என்ற தலைப்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் (தருவை மைதானம்) வாயிலில் இருந்து துவங்கி நடைபெற்றது.
மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், பொதுப் பிரிவு ஆண்கள், பொதுப் பிரிவு பெண்கள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என முதல் மூன்று இடத்தினருக்கும், 4 முதல் 10ஆம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.500 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் பிரிவு:
முதலிடம் – சிதம்பர ராஜா
இரண்டாம் இடம் – அன்பு செல்வன்
மூன்றாம் இடம் – மாரி செல்வம்
பள்ளி மாணவிகள் பிரிவு:
முதலிடம் – மகாலட்சுமி
இரண்டாம் இடம் – அனுபிரியதர்ஷினி
மூன்றாம் இடம் – நிவேதா
பொதுப் பிரிவு ஆண்கள்:
முதலிடம் – கருத்தபாண்டி
இரண்டாம் இடம் – மனோஜ் குமார்
மூன்றாம் இடம் – ரூபன் டேனியல்
பொதுப் பிரிவு பெண்கள்:
முதலிடம் – ரம்யா
இரண்டாம் இடம் – ராதிகா
மூன்றாம் இடம் – திவ்யாமணி
மாரத்தானிற்கு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிறுவனர் இயக்குநர் ஜாய்சன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஐபிஎஸ்,
டிஎம்பி பவுண்டேஷன் நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
மாரத்தானில் கலந்து கொண்ட வயது குறைந்த மாணவர், அதிக வயதுடைய முதியவர், பார்வை மாற்றுத் திறனாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என நான்கு பேர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் டீ-ஷர்ட் வழங்கப்பட்டது.
சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு மாரத்தானை சிறப்பாக ஒருங்கிணைத்தனர் விக்னேஷ், ஹரி பிரசாத், அசோக், சந்தோஷ், பிரசன்னா, கௌதம் உள்ளிட்ட அறக்கட்டளையின் இளைஞர்கள்.
“போதைக்கு மாற்று விளையாட்டு” — ஆரோக்கியமான சமுதாயத்திற்கான வலியுறுத்தலாக விளங்கிய நிகழ்வு!
தூத்துக்குடி
தூத்துக்குடியில் “போதைக்கு மாற்று விளையாட்டு” — 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கந்தசஷ்டி களைகட்டும் திருச்செந்தூர் — நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அடுத்த
“ஐம்பது ரூபாய்க்கு முழு மனசார சேவை — கார்த்தீசன் மாதிரி மெக்கானிக் தான் வித்தியாசம்!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026