நாசரேத் – சாத்தான்குளம் சாலையில் இயங்கும் டூவீலர் ஒர்க்ஷாப் ஒன்றை இளைஞர் கார்த்தீசன் திறம்பட நடத்தி வருகிறார். அவர் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் தொகை மிக குறைவாக இருந்தாலும், செய்யும் சேவை அளவு மிக உயர்ந்தது என்பதுதான் அவரின் சிறப்பு.
நேற்று பைக்கிற்கு ஆயில் மாற்ற சென்ற வாடிக்கையாளரின் அனுபவம் இதற்கு சான்றாக இருந்தது. பைக்கின் பழைய ஆயிலை எடுப்பதற்காக எஞ்சின் அடிப்பகுதியிலுள்ள நட்டை கழற்றி, அதின் கீழ் பாத்திரம் வைத்தார்.
ஆயில் வழிந்து முடியும் வரை காத்திருக்காமல், அந்த இடைவெளியில் இரண்டு டயர்களுக்கும் ஏர் செக் செய்து விட்டார்.
அதன் பின், செயின்ஸ் பிராக்கெட்டை சரி செய்வதற்காக பின் வீலை கழற்றி, பிராக்கெட்டை டைட் செய்து, செயினுக்கு புதிய ஆயில் பூசி பராமரித்தார்.
பழைய ஆயில் முழுவதுமாக வெளியேறியதும், புதிய ஆயிலை ஊற்றி, வேலை முடிந்ததும் ₹50 ரூபாய் மட்டுமே கூலியாக பெற்றார்.
வெறும் ஆயில் மாற்றத்திற்கே அந்த தொகையை நாம் கொடுப்போம். ஆனால் அந்த ஐம்பது ரூபாய்க்கு அளவிலாத உழைப்பும் உண்மையும் சேர்க்கும் கார்த்தீசன், இன்று பலரின் பாராட்டை பெற்றுள்ளார். பணத்தை விட மனசார சேவையை முக்கியமாகக் காணும் அவரின் பண்பு அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும்.
தூத்துக்குடி
“ஐம்பது ரூபாய்க்கு முழு மனசார சேவை — கார்த்தீசன் மாதிரி மெக்கானிக் தான் வித்தியாசம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் “போதைக்கு மாற்று விளையாட்டு” — 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான்!
அடுத்த
“வேல் வேல் முருகா! – தூத்துக்குடியில் கந்த சஷ்டி முன்னிட்டு 108 பால்குடம் பவனி உற்சாகம்”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026