“குறைகளை கேட்பது பெரிதல்ல, அதை நிறைவேற்றித் தருவதே மக்கள் பணி!” — என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், இந்த வாரம் மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
துணை ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் மண்டலத் தலைவர் அன்னலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “மாநகராட்சியின் இணையதளத்தின் மூலமாக மக்கள் தங்கள் குறைகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அவற்றை நாங்கள் விரைவாக பரிசீலித்து தீர்வு வழங்கி வருகிறோம். அதேசமயம், இந்த குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் மக்கள் நேரடியாக பேசும் வாய்ப்பும் கிடைக்கிறது,” என்றார்.
மழை பாதிப்பு குறித்து பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாநகரத்தின் 60 வார்டுகளில் 58 வார்டுகள் பாதிக்கப்படாமல் இருக்கும்படி தேவையான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2, 16, 17 ஆகிய வார்டுகளில் மட்டும் தற்காலிக நீர்தேக்கம் ஏற்பட்டது; அதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
மேலும், “16, 17, 18வது வார்டுகளில் நடைபெறும் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெறும். மாநகரம் முழுவதும் விளையாட்டு திடல்கள், பூங்காக்கள், நடைபாதைகள் உள்ளிட்ட பொது வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்,” என்றும் கூறினார்.
பக்கிள் ஓடையில் 500 மீட்டர் நீள தூய்மைப் பணிகள் செய்யப்பட்டுள்ளதையும், எப்சிஐ குடோன் முதல் 7 கி.மீ தூரம் வரை ஓடை விரிவாக்கப் பணிகள் தொடங்கவுள்ளதையும் அவர் அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
காலி மனைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 453 நோட்டீஸ்களில் 170 பேர் தங்கள் நிலங்களை சீரமைத்ததாகவும், மீதமுள்ள இடங்களில் மாநகராட்சி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மீளவிட்டான் பகுதி இணைந்த 15 முதல் 18 வார்டுகளில், முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மழை நீர் தேங்கும் கோக்கூர் குளம், புலிப்பாஞ்சான் குளம், ஆதிபராசக்திநகர் பகுதிகளில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், “கடந்த ஆண்டு ஜூலை 2024 முதல் அக்டோபர் 2025 வரை மொத்தம் 901 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 897 மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டது. 4 மனுக்கள் திட்ட அனுமதி வகையில் பரிசீலனையில் உள்ளன,” என்றார்.
சுகாதார துறை அதிகாரிகள் தொற்றுநோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறி, “மழை, வெயில் என எந்த சூழலிலும் தூத்துக்குடி மக்களுக்கு நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம். மனுக்கள் மட்டுமல்ல — தீர்வுகளே எங்கள் பணி!” என்று உறுதியளித்தார்.
முகாமில் நகர பொறியாளர் வேலாயுதம், உதவி பொறியாளர்கள் காந்திமதி, பாலச்சந்திரன், இராகவி, இளநிலை பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சரோஜா, ஆய்வாளர் ராஜபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவுன்சிலர்கள் ராமர், கனகராஜ், கந்தசாமி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், பகுதி சபா உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் 15 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை மனுக்களாக வழங்கினர். அவற்றை உடனடியாக தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
“மனுக்களுக்கு தீர்வே எங்கள் பணி!” — குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மனுக்கள் குவிந்தாலும், தீர்வில் தாமதம் இல்லை!” — தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை"
அடுத்த
மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள் மீட்புக்கேட்டு — தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழர் விடுதலைக் களம்!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026