தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர் தேர்வாகி ஊர்க்காவல் படை வீரர்களாக இணைந்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட இந்த 13 பேருக்கும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பதவி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

புதியதாக சேர்க்கப்பட்ட இந்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கான 45 நாள் பயிற்சி நாளை (09.12.2025) முதல் தொடங்குகிறது. நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் தூத்துக்குடி தலைமையக காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகமும் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பாதுகாப்பு வலுவூட்டப்படும் நிலையில், புதிய 13 ஊர்க்காவல் படை வீரர்களின் இணைப்பு மாவட்டத்தில் வரவேற்கத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.