தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 5000 தான் தனது கணவரின் உயிரைக் காப்பாற்றியதாக ஒரு பெண் பயனாளி உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது “முதல்நாள் இரவு என் கணவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் என்ன செய்வது, பணம் எங்கே இருந்து வரும் என்ற கவலையில் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தேன்.
விடியற்காலையில் என் மகன், ‘அம்மா, அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்’ என்று சொன்னான். ‘எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நம் வங்கி கணக்கில் ரூபாய் 5000 வந்திருக்கிறது’ என்றான்.
எப்படி வந்தது என்று கேட்டபோது, ‘முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமைத் தொகை தான் இது’ என்று கூறினான். அந்தச் செய்தி கேட்ட உடனே எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
உடனே என் கணவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். இன்று என் கணவர் உயிருடன் இருக்கிறார். அதற்கு இந்த முதல்வர் தான் காரணம்,” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “நான் இன்றுவரை அரசின் இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் பயணம் செய்து வருகிறேன். அதற்கும் இந்த முதல்வர் தான் காரணம். அதனால் நான் காலம் முழுவதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்காக என்னால் முடிந்த அளவு உழைப்பேன். மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக வர நான் மனப்பூர்வமாக பாடுபடுவேன்,” எனத் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல குடும்பங்களுக்கு நேரடி ஆதரவாக அமைந்துள்ளதாக இந்த உணர்ச்சி மிகுந்த பேட்டி வெளிப்படுத்துகிறது.