தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


MGR நகர், டேவிஸ்புரம் மருத்துவர் நகர், S. காமராஜர்புரம், சுடலையாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளிடம் சென்றடைவது தான் தனது முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் சரவணகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி பிளோமின்ராஜ், ஒன்றிய சுற்றுசூழல் அணி ராஜேந்திரன், மகளீரணி ஆரோக்கியமேரி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இலவச இ-பட்டா வழங்கப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசு திட்டங்கள் விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படுவதற்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.