தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி 32வது வார்டு, 3வது தெரு சந்திப்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டம் மக்கள் திரளுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று உரையாற்றினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகி ஏ.பி.சி.வி. சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, 30, 31 மற்றும் 32வது வார்டுகளைச் சேர்ந்த செயல்வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டதை மகிழ்ச்சியுடன் பாராட்டினார். பெயர் விடுபட்டிருந்தால் வருத்தப்பட வேண்டாம் என்றும், அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
32வது வார்டு சார்பில் ஜோதி ராஜ், வட்டச் செயலாளர் கந்தசாமி, தாமஸ், இளங்கோ, குருசாமி, தலைவாசாமி, மாரியம்மாள், வெங்கடேஷ், ஜான்சன், ராதா, பாலசந்திரன், எட்வர்ட், ராஜா, பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். 31வது வார்டு சார்பில் மாநகர துணைச் செயலாளர் கனகராஜ், வட்டச் செயலாளர் பாலு, வேலாயுதம், பர்கொண்டநாட்ச், சுந்தர்ராஜ், பிஎஸ்என்எல் பால்ராஜ், ஜெயமுருகன், சின்னத்துரை, சண்முகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
30வது வார்டு சார்பில் வட்டச் செயலாளர் செந்தில்குமார், கார்த்திகேயன், நாராயணன், ராஜா, அந்தோணி ராஜ், சுப்ரமணியன், ராஜ்மோகன், அன்பரசன், சந்திரசேகர், பிரபு, தங்ககுமார், ரவிக்குமார், உமர், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாமன்ற உறுப்பினர் ஜான், முத்துமாரி, கண்ணன், பொன்னப்பன், செயலாளர்கள் சுரேஷ், சிங்கராஜ், கதிரேசன், மந்தரகுமார், பொன்னுசாமி, பெருமாள், பத்மாவதி, கருப்பசாமி, ரவீந்திரன், அருணாதேவி, மகேஸ்வரி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், தேமுதிக மகளிர் அணி உறுப்பினர்கள், வியாபாரிகள், ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு கல்வி, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் கூறினார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், வியாபாரிகளுக்கு எந்தத் தடையும் இல்லாமல் சுதந்திரமாக தொழில் செய்யும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசு அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். விவசாயம், கல்வி, மருத்துவம், இளைஞர் தொழில் தொடக்கம், பெண்கள் சுயநிறைவு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கினார்.
இறுதியாக, “மக்களின் நலனுக்காக தொடங்கிய திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் மீண்டும் இந்த ஆட்சி அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும்” என்று அமைச்சர் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.