தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வீராங்கனைக் குழுவின் சார்பாக மார்ச் 24, 2026 அன்று “அழகி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ சிறப்புரை வழங்கி, பெண்களின் தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். சமூக ஆர்வலரும் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியருமான பாத்திமா பாபு முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் குறித்து பேசினார்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத் தொழிலாளிகள் வெங்கடேஸ்வரி, காளீஸ்வரி மற்றும் ஆனந்தஜோதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் காளீஸ்வரி தனது அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நேர மேலாண்மை குறித்து உணர்ச்சிகரமாக பகிர்ந்துகொண்டது அனைவரையும் ஆழமாகத் தாக்கியது.
நிகழ்ச்சியில் சக்தி பறை இசையுடன் பெண்களின் உள்நிலை சக்தியை கொண்டாடும் பாடலை வழங்கி நிகழ்வை மேலும் சிறப்பித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் சுமார் 250 மாணவிகள் பயன் அடைந்தனர். நிகழ்ச்சி பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான உறுதியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.