மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டம் அண்ணா நகர் பகுதி 34வது வார்டு, 3வது மைல் மெயின் ரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்றார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசி சண்முகம், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டராஜா, காங்கிரஸ் தலைமை செயற்குழு உறுப்பினர் முரளிதரன், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மறுமலர்ச்சி திமுக சார்பில் நக்கீரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாடசாமி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட பொருளாளர் வின்சென்ட், மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மொய்தீன், மக்கள் நீதி மையம் சார்பில் ஜவகர், மண்டல தலைவர் ராஜேஷ், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் வல்லரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வட்டச் செயலாளர் ஆனந்தன், அவைத்தலைவர் முத்துராமலிங்கம், ஜெயராமன், மகேந்திரன், தாமரலிங்கம், முரளி, அன்னலட்சுமி, மாரிமுத்து, குரு கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர், காங்கிரஸ் நிர்வாகி பால்ராஜ், 15வது வார்டு செயலாளர் பொன் பெருமாள், 18வது வார்டு முருகன், வட்டச் செயலாளர்கள் சரவணன், செல்வராஜ், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வம், மாணவர் அணி துணை அமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:


தமிழ்நாடு மக்கள் எதிர்நோக்கும் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் தலைமையில் மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதல் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை பாதுகாத்தது இந்த அரசின் சிறப்பாகும். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மூலம் கிராமம் முதல் நகரம் வரை வீடுகளுக்கே மருத்துவ சேவை சென்றடைந்துள்ளது.


பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை மூலம் பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. இதனால் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு இன்று பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியில் நாட்டில் முன்னணியில் உள்ளது.


உயர்கல்வி பெறும் இளைஞர்களின் விகிதம் 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசை விமர்சித்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை மக்கள் மத்தியில் வெளிப்படையாக உள்ளது. கடந்த ஆட்சியில் வளர்ச்சி நின்ற நிலையில் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சி அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக ஒன்றுபட்டு செயல்பட்டால், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, இன அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்க இந்த கூட்டணி ஆட்சி தொடர வேண்டும். அனைத்து செயல்வீரர்களும் ஒன்றிணைந்து வாக்காளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். மக்கள் முழுமையாக ஆதரவு வழங்கினால், மீண்டும் நல்லாட்சி அமைவது உறுதி என்று அமைச்சர் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக செயல்வீரர்கள், மதிமுக நிர்வாகிகள் மகாராஜன், நக்கீரன், தொம்பை, பொன்ராஜ், பொய்யாமொழி, மனோகர், சுரேஷ்குமார், சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், வீரபொம்முதுரை, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.