தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை மற்றும் கருத்து கேட்கும் கூட்டம் தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர்கள் ஆண்டனி விஜிலியஸ் மற்றும் செல்வகுமார் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் S. டேனியல் ராஜ் மற்றும் M. B. சுடலையாண்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் க. பெருமாள் சாமி கூட்டத்தை முன்னிலையிலிருந்து வழிநடத்தினார்.
மேலும், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பெத்துராஜ், மூத்த நிர்வாகி ஜெயக்கொடி, கோவில்பட்டி நகரத் தலைவர் அருண்பாண்டியன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் முத்துமணி, மாநகர மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மகிளா காங்கிரஸ் சார்பில் ஜெயஜோதி, உமா மகேஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
இதனுடன், வர்த்தக காங்கிரஸ் டேவிட் பிரபாகரன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகராஜா, செல்லதுரை, தக்ஷிணாமூர்த்தி, துரைராஜ், ஹரி பாலகிருஷ்ணன், வைப்பார் பாலசுப்பிரமணியன், தர்மா, நகர தலைவர் துரை மணி, வட்டாரத் தலைவர்கள் சந்தன பாண்டி, ஜேசுதாசன், எட்வர்ட் ராஜ், ரவி, முருகன், ஜேம்ஸ் லாரன்ஸ், விஜய், புனேகிரிதர் மற்றும் பழங்குடியினர் பிரிவு முனியசாமி, ஆராய்ச்சித்துறை சிவராஜ் மோகன், விவசாய பிரிவு பேரையா, இக்னேஷியஸ், ரூஸ்வெல்ட், நிர்மல் கிறிஸ்டோபர், சேகர், ராமர், ராஜாராம், சுரேஷ்குமார், A.D. பிரபாகரன், வக்கீல் செல்வம், கோபால், மகாலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும், மகிளா காங்கிரசை சார்ந்த தனலட்சுமி, பேச்சியம்மாள், இசக்கியம்மாள், சிந்தாமணி, அசன் பாத், வசந்தி, சாந்தி, சுந்தரி உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இக்கூட்டத்தில், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பரிமாறப்பட்டன.