தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் பி. கீதா ஜீவன் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, 08.04.2026 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில், 6வது வார்டு முழுவதும் மற்றும் 11, 12, 21வது வார்டுகளின் விடுபட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
11வது வார்டில் இன்னாசியார்புரம் 1, 2, 3 தெருக்கள், கந்தசாமிபுரம், சக்தி விநாயகர் புரம் 5வது தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 21வது வார்டில் சுந்தர் ராமாபுரம் 1, 2, 3வது தெருக்கள், அழகேசபுரம் 1, 2வது தெருக்கள் உள்ளிட்ட இடங்களிலும், 12வது வார்டில் ஸ்டேட் பேங்க் காலனி 2வது தெரு, கோமதிபாய் காலனி 1, 2வது தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகே பொதுமக்கள் அலைகடலென திரண்டு, அமைச்சர் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் நேரடியாக கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்வில் கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு பிரச்சாரத்தை சிறப்பித்தனர். தூத்துக்குடியில் கீதா ஜீவனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை ஆதரவு, தேர்தல் சூழலில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.