திருநெல்வேலி மத்திய மாவட்ட மானூர் கிழக்கு ஒன்றிய கழக திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி துறையூர் சாரல் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாபெரும் கைப்பந்து போட்டியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சண்முகையா கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.

இன்றைய தினம் மாநில அளவிலான கைப்பந்து துவக்க போட்டியில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.க. மணி, மாலைராஜா, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தென்காசி முன்னாள் மாவட்ட கழக செயலாளர் துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி. சுரேஷ், மாவட்ட விவசாய அணி வே. செண்டு, அரசு வழக்கறிஞர் கந்தசாமி, சிந்து கணேசன், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, அணவை கீர்த்தி,
மற்றம் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
