Breaking News

அமாவாசை நாளில் பிரத்தியங்கிரா தேவி அருள்விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

  • Share on

தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் பங்குனி மாதம் 04ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.


17.04.2026 அன்று மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து யாகமும் நடைபெற்று, பக்தர்கள் மிகுந்த பக்தி உணர்வுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.


இந்த அமாவாசை வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், புத்ரபாக்கியம் கிடைக்கும், மன அமைதி ஏற்படும், செல்வ வளம் பெருகும், தீராத நோய்கள் குணமாகும், கடன் தொல்லைகள் நீங்கும், அரசியல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் கிடைக்கும், முன்னோர் சாபங்கள் நீங்கும், தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும், முன்ஜென்ம பாவங்கள் தீர்ந்து குடும்பத்தில் ஆனந்தம் பெருகும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


வழிபாட்டிற்கு பின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருளைப் பெற்றனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.


  • Share on

பிரத்தியங்கிரா ஆலயத்தில் மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!!

  • Share on

Trending News