Breaking News

பிரத்தியங்கிரா ஆலயத்தில் மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!!

  • Share on

ஸ்ரீசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில், பங்குனி மாதம் 24ஆம் தேதி (07-04-2026, செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில் ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு மஹா யாகம், அபிஷேகம் மற்றும் அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.


இந்த நிகழ்ச்சி “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழிக்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி சிறப்பு மஹா யாக வழிபாடுகள் காலை முதல் மாலை வரை நடந்தன.


வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை போன்ற மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.


மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


  • Share on

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு 64 வகை அபிஷேகம் – தூத்துக்குடியில் பக்தர்கள் திரளாக தரிசனம்!!

அமாவாசை நாளில் பிரத்தியங்கிரா தேவி அருள்விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

  • Share on

Trending News