Breaking News

“பலூன் சின்னம் கைகொடுக்குது… ஓட்டப்பிடாரத்தில் ஆதி (எ) ஆனந்துக்கு மக்கள் ஆதரவு பெருக்கெடுகிறது!”

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சமூக ஆர்வலர் ஆதி (எ) ஆனந்துக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய பலூன் சின்னத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உருவாகி வருகிறது.


பலூன் சின்னம் கிடைத்ததை முன்னிட்டு மாப்ளையூரணி பகுதியில் இளைஞர்கள் மற்றும் மகளிர் குழுவினர் உற்சாகமான வரவேற்பை ஏற்பாடு செய்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, பலூன் சின்னத்துடன் ஊர்வலமாக வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். முழுப் பகுதியும் திருவிழா சூழலில் காட்சியளித்தது.


மக்கள் நலன், கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதாக ஆதி (எ) ஆனந்த் தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.


“பலூன் சின்னம் – மக்கள் வெற்றியின் சின்னம்” என்ற முழக்கத்துடன் ஆதரவாளர்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.


  • Share on

“தொகுதி மறுவரையறை பெயரில் குழப்பம் வேண்டாம்!” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கடும் எச்சரிக்கை!!

  • Share on

Trending News