உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ம் நாள் இன்று புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.



தூத்துக்குடியில் அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையம் சார்பாக உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியானது கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி தெற்கு காவல் நிலையம் வரை இந்த சுற்றிச் சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் சுமார் 300 க்கு மேல் மாணவர்கள் பங்கேற்று பேரணியாக சென்று பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கினார்கள். விழாவில் அகில இந்திய கட்டுநர் சங்கம் மாநில தலைவர் வெங்கடேசன், மாநில சுற்றுச்சூழல் குழு தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.


விழாவின் ஆரம்பமாக தூத்துக்குடி மைய தலைவர் ஜான் ஜெபமணி வரவேற்பு நிகழ்த்தினார். கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மும்தாஜ், முத்து உதவும் கரம் தலைவர் பைசர், இப்ராஹிம், சுலைமான், ஜாபர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த சுற்றுச்சூழல் பேரணி காலை 9 மணியளவில் தொடங்கி விவிடி சிக்னல் வழியாக தெற்கு காவல் நிலையம் சென்று பின்னர் கிரஸண்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. 


அதைத்தொடர்ந்து புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் கஷ்மீர் முன்னிலையில், டாக்டர். ஸ்ரீனிவாசன் (வீ கேன் டிரஸ்ட்) சார்பில் விழிப்புணர்வு பட்டறை நடத்தப்பட்டது.


இந்த விழா ஏற்பாட்டினை மாநில சுற்றுச்சூழல் குழு தலைவர் முஜாஹித் அலி சிறப்பாக செய்திருந்தார். இறுதியாக தூத்துக்குடி மைய செயலாளர் ஜெயபால் ஆலிவர் நன்றியுரை நிகழ்த்தினார். அகில இந்திய கட்டுநர் சங்கம் மையம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியில் சகா கலை குழு கலைஞர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.