தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் இன்று 1 ம் கேட் இரயில் நிலையம் எதிரே காந்தி சிலை அருகில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காலி மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் அவர் கூறியதாவது மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி குடித்துவிட்டு காலி பாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் காயங்கள் ஏற்படுவதாகவும் துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் காலி பாட்டில்களை மதுபான கடையிலேயே கொடுத்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 வரை பெற்றுக் கொள்ளலாம். எனவும் கண்ணாடி பாட்டில்களை தவிர வேறு எந்த வகையிலாவது மதுபானங்களை பேக்கிங் செய்து விநியோகம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்தார்.
காலியான மது பாட்டில்களை மதுபான கடையிலேயே கொடுத்தால் ஒரு பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 வரை மதிப்பீர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து (4.10.2021) தேதியிட்டு சுமார் 600 க்கும் மேற்பட்ட முகவரிக்கு பதிவு தபால் அனுப்பி எனது கருத்தினை தெரிவித்தேன் என்று கூறினார்.
இதை சென்னை உயர்நீதிமன்றம் கருத்திற் கொண்டு கடந்த காலங்களில் ஒரு சில மாவட்டங்களுக்கு காலியான மதுபாட்டுகளை திரும்ப கொடுத்தால் ரூபாய் 10 வரை பெற்றுக்கொள்ளலாம் என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பத்திரிகை செய்தியாக இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு இதை அனைத்து மாவட்டங்களிலும் கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும்,
அதோடு மட்டுமல்லாது மது பிரியர்களின் நலன் கருதி ஆதார் அடையாள அட்டை மூலம் கைரேகை பெற்று மதுபானம் குறிப்பிட்ட அளவு தான் ஒரு நபருக்கு வழங்க வேண்டும். என்பதையும் அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி நூதனமான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
