தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் இன்சுவை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் ஆக்னஸ் லலிதா புற்றுநோய் ஏற்படும் காரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமை வகித்தார். உறவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளித்தனர். தொடர்ந்து, புற்றுநோய் நோயாளிகளின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தலைவர் மருத்துவர் லலிதா சுப்பிரமணியன் நன்றி கூறினார்.