9-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா–2026, வரும் பிப்ரவரி 12 முதல் நெல்லை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக, 05.02.2026 அன்று புத்தகக் கண்காட்சி சின்னம் அறிமுக விழா நெல்லை வர்த்தக மையம் முன்பாக நடைபெற்றது.


இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. சுகுமார் புத்தகக் கண்காட்சி சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, கலைமாமணி முனைவர் ஆ. சந்திர புஷ்பம் வழங்கிய கிராமிய பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும், முனைவர் சகா. மா. சங்கர் தலைமையிலான குழுவினர் ஒயில் ஆட்டம், மரக்கால் ஆட்டம், குதிரை ஆட்டம், பறை இசை, மயில் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கினர்.


நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியம் வரையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.