தூத்துக்குடியில் தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று மாலை பெண்கள் பாதுகாப்பு & பாலின நீதி கூட்டு இயக்கம் மாநாடு 2025 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்லெட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளர் மீனா, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழ தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் பேராசிரியர் சரசுவதி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் இரா. கீதா, வீராங்கனை இயக்கம் தலைவர் பேராசிரியர் பாத்திமா பாபு, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு டாக்டர். கேபிரியலா, சமூக செயற்பாட்டாளர் ஜூலியட் தெரசிட்டா, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பீடி தொழிலாளர் யூனியன் செயலாளர் அன்னகௌரி, அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் சசிகலா, ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள்.


இறுதியில் நெய்தல் பாதுகாப்பு இயக்கம் ஸ்டெல்லா நன்றியுரை ஆற்றினார். கூட்ட ஒருங்கிணைப்பு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம், உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கம் சிறப்பாக செய்திருந்தனர்.

கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து, வருகின்ற ஜுலை 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை லயோலா கல்லூரியில் மாநில அளவிலான மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை எப்படி வெற்றி பெற செய்வது  சம்பந்தமான கலந்துரையாடல் நடத்தினார்கள்.