தூத்துக்குடியில் இன்று மாலை தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் பெண்கள் பாதுகாப்பு & பாலின நீதி கூட்டு இயக்கம் மாநாடு 2025 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு தலைவர் ராமலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளர் மீனா, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழ தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் பேராசிரியர் சரசுவதி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் இரா. கீதா, வீராங்கனை இயக்கம் தலைவர் பேராசிரியர் பாத்திமா பாபு, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு டாக்டர். கேபிரியலா, சமூக செயற்பாட்டாளர் ஜூலியட் தெரசிட்டா, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பீடி தொழிலாளர் யூனியன் செயலாளர் அன்னகௌரி, அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் சசிகலா, ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள்.

இறுதியில் நெய்தல் பாதுகாப்பு இயக்கம் ஸ்டெல்லா நன்றியுரை ஆற்றினார். கூட்ட ஒருங்கிணைப்பு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம், உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கம் சிறப்பாக செய்திருந்தனர்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் இரா. கீதா செய்தியாளர்களிடம் கூறுகையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக்கான பெண்கள் மாநாடு மாநில மாநாடு வருகின்ற ஜூலை 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இன்றைக்கு சமூகத்தில் கல்வி நிறுவனங்களிலும், பணி செய்யக்கூடிய இடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதேபோல் பெண்கள் புகார் கொடுப்பதில் சட்டங்களில் குறைபாடுகள் இருக்கிறது. குறைபாடுகளை நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம்.

இந்த மாநாட்டில் பெண் தொழிலாளர்கள் மற்றும் பலவகை தொழிலாளிகள் வீட்டு வேலை தொழிலாளர்கள், உப்பள தொழிலாளிகள், விவசாய தொழிலாளர்கள், போன்ற அமைப்புச் சாரா தொழிலாளர்கள், மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மட்டுமல்லாது மாணவிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பெண்களுக்கான கொள்கை என்பது நிறைவேற்றப்பட்டு செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இன்றைக்கு அமைப்புச் சாரா தொழிலாளர்கள் புகார் அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் புகார் பெண்கள் உள்ளது.

இந்த புகார் பெட்டிகள் அனைத்து நகரங்களிலும், மண்டலங்கள் மற்றும் வார்டுகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், உள் புகார் குழு நிறுவனத்தில் இருக்கக்கூடிய உள் புகார் குழு முறையாக செயல்பட்டு விழிப்புணர்வை பெண் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக மதிப்பீட்டு கல்வி முதல் கல்வி முதல் உயர் கல்விவரை அரசியல் சாசன சமத்துவம், சகோதரத்துவம், நீதி, மதச்சார்பின்மை, ஆகியவற்றிற்காகவும், அதே நேரத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு இவற்றிற்காகவும், உடல்நல கல்விக்காகவும் சுற்றுச்சூழல் கல்விக்காகவும் பெண்களுக்கு ஒரு நல்ல தற்காப்பு பயிற்சியை தரக்கூடிய வகையிலும் இந்த மதிப்பீட்டு கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தியும், எழுத படிக்க தெரியாதவர்கள் எப்படி புகார் தருவது அதுக்கு ஏதுவான புகார் தருகின்ற ஒரு முறைகளையும் அவர்களுக்கு நிச்சயமாக அந்த மாநாட்டில் ஆலோசனைகள் தர போகிறோம்.

எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட போகிறோம். நிச்சயமாக இன்றைக்கு அனைத்து தொழிலாளர் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும், இன்றைக்கு இருக்கக்கூடிய குழந்தை உரிமை அமைப்புகளும், என பல அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறோம். அது சம்மந்தமாக தூத்துக்குடியில் இன்று இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டம் மூலம் பல ஆலோசனைகள் வந்திருக்கின்றன. அந்த ஆலோசனைகளையும் நிச்சயமாக கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த மாநாடானது நடை பெறப்போகிறது ஒரு பெரிய அளவில் பெண்களுடைய பங்கேற்புடன் இந்த மாநாடு நடை பெறப்போகிறது. என்பதை மட்டும் நாங்கள் இப்பொழுது கூறி கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.