நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தூத்துக்குடியில் ரூ 120.53 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் பகுதி சார்ந்த வளர்ச்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் தூத்துக்குடி 3 வது வார்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கவுன்சிலர் ரெங்கசாமி, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.