ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 118 மாணவ, மாணவிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, கிளை செயலாளர்கள் ராபின் ஞானபிரகாசம், தயாளன், அவைத்தலைவர் மனோகரன், துணை பிரதிநிதி பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், தருவைக்குளம் விஜய், புதுமைசாமி, மீனவர் சங்கத் தலைவர் லூர்துராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், மேல அரசடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் மேல மருதூர் கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியும், பனையூர் கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், உதவி பொறியாளர் காயத்ரி, வட்டார வழங்கல் அலுவலர் சுரேஷ்குமார், ஊராட்சி செயலாளர் பழனி முருகன், கிளை செயலாளர் ஜான் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரனை, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா வரவேற்றார்.