தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 4.2.2026 புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை சுமார் 4 ஆயிரம் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், மாநகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாநகராட்சி துணை ஆணையர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.