தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பசுவந்தனை அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதசுவாமி திருக்கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான திருப்பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.வி. மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.


அதேபோல், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனையில் கனிம சுரங்க நிதியின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கான பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு திராவிட மாடல் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஜி.வி. மார்கண்டேயன் வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 13-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியும், மகாகவி பாரதியார் பேருந்து நிலையத்தில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வுகளில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், எட்டையாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், மகாராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் ராமானுஜம், முத்துக்குமார், மாவட்ட மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.