தமிழகத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட மாடல் திமுக அரசின் அரசியல் போக்குகள், மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் ஆட்சி தோல்விகளை மக்கள் முன் அம்பலப்படுத்தும் வகையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
இதன் முன்னேற்பாடாக, பாஜக மகளிரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி, பெண்களின் பாதுகாப்பு, சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் விவிடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சட்டம்–ஒழுங்கு நிலை முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதால், பெண்கள் அச்சத்தில் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் மகளிரணி சுட்டிக்காட்டியுள்ளது.
பாஜக தலைமையின் அறிவிப்பின்படி,
பிப்ரவரி 10 – மகளிரணி,
பிப்ரவரி 12 – இளைஞரணி,
பிப்ரவரி 18 – பட்டியல் அணி
என மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்ந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்று, திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து குரல் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட தலைவர் சித்ராங்கதான், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மகளிரணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, மகளிரணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.