தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், திருக்கோவில் வளாகத்தின் உள் பகுதியில் உள்ள சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கை அச்சுகள் மற்றும் அழுக்குகளை அகற்றும் வகையில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.


இந்த சுத்தம் செய்யும் பணியை இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா தலைமையில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அடியார்கள் இணைந்து மேற்கொண்டனர். திருக்கோவிலின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


திருக்கோவில் வளாகத்தை தூய்மையாகவும், ஆன்மிக சூழலுடன் பராமரிக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், கோவில் சுவர்களில் தேவையற்ற குறியீடுகள் இடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து முன்னணி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.