தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மண்டலங்களில் புதன்கிழமையன்று நடைபெறும். அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சில நிர்வாக காரணங்களால் மட்டுமே  புதன்கிழமையை தொடர்ந்து மறுநாள் வியாழக்கிழமை நடைபெறும்.


அதன்படி இன்று (27.03.2025) வியாழக்கிழமை தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் போன்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலக பணியாளர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டது.


பெயர் திருத்தம், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் சம்மந்தமான பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்க் கொண்டு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கின்ற முகாமிலேயே சான்றிதழ் கேட்டு மனு அளித்த பொதுமக்களிடம் அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி, வழங்கினார்.


சான்றிதழ் கேட்டு மனு அளித்த உடனேயே விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய ஆணைகளை வழங்கிய மேயர் மற்றும் ஆணையரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

முகாமில் துணை ஆணையர் சரவணகுமார், தெற்கு மண்டல துணை ஆணையர் கல்யாண சுந்தரம், மாநகர நல அலுவலர் அரவிந்த் ஜோதி, தெற்கு மண்டல தலைவரும், கவுன்சிலரும், வழக்கறிஞருமான பாலகுருசாமி, பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருமான ராமகிருஷ்ணன்,  கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், விஜயகுமார், கம்யூனிஸ்ட் முத்து மாரி, முத்து வேல், ராஜேந்திரன், சரவணகுமார், வைதேகி, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.