பிரையன்ட் நகர் சிதம்பரம் நகர் வியாபாரிகள் நல சங்கத்தின்  21 வது ஆண்டு விழா, வெற்றி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, என முப்பெரும் விழாவானது இன்று (25.03.2025) மாலை ஓம் மஹாலில் வைத்து நடைபெற்றது.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னாள் மாவட்ட செயலாளரும், பிரையன்ட் நகர், சிதம்பரம் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவருமான ஞானசெல்வன் தலைமை தாங்கினார்.

பிரையன்ட் நகர் சிதம்பரம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் மாரியப்பன், முதன்மை கூடுதல் செயலாளர் ஜான் ஸ்டீபன், பிரையன்ட் நகர் சிதம்பரம் நகர் வியாபாரி  நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் கௌதம், பிலிப்ஸ் ராஜன், துணை தலைவர் பொன்ராஜ், பிரையன்ட் நகர், சிதம்பர நகர் வியாபாரிகள் நல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் லோகேஷ் டேனி, பிரையன்ட்  நகர், சிதம்ப நகர் வியாபாரிகள் நல சங்கத்தின் மகளிர் அணி தலைவி மாணிக்க ராணி, மகளிர் அணி பொருளாளர் ஜான்சி ராணி, ஆலோசகர் மல்லிகா, துணைத் தலைவர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



பிரையன்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகு மந்திரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் தூத்துக்குடி மண்டல தலைவர் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகர செயலாளர் கிங்ஸ் வினோத்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகர தலைவர் ஜெயபாலன், அரசு வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் தேசிய முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு தையல் மிஷின், இலவச வேஷ்டி சேலைகள், மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள் ஆகிய நலத்திட்டங்களை வழங்கி பேரூரை ஆற்றினார். துணை காவல் கண்காணிப்பாளர் மதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் என 1500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரையன்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் கூடுதல் செயலாளர் செல்வின் பாண்டியராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரையன்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.