தூத்துக்குடி மாநகராட்சி தாளமுத்து நகர், சுந்தரவேல் புரம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,

தேங்கிய மழை நீரால் சுந்தரவேல் புரம் பகுதி முழுவதும் குளம் போல் காட்சி அளித்து. பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழியாக தெருக்களை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தேங்கிய மழை நீர் துர்நாற்றம் வீச தொடங்கி, கொசு  தொல்லையும், அந்த பகுதி முழுவதும் அதிகமாக உள்ளது. இதுபோக நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தேங்கிய மழை நீரை விரைவில் அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.