கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோரம்பள்ளம் குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், கோரம்பள்ளம் குளம் மற்றும் காலங்கரை பிள்ளையார் கோவில் பின்புறப் பகுதிகளில் நிலைமையை நேரில் பார்வையிட்டார் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா.
குளத்தின் கரைகளின் நிலை, நீர்வரத்தின் அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரைகளில் மணல் மூடைகளை அடுக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் நஸ்ரின் வினு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் விஜயமூர்த்தி, ஊராட்சி செயலர் சீனிவாசன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், காலாங்கரை ராஜ், கிளை செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல், அத்திமரப்பட்டி 24 மதகிற்கு வரும் நீர்வரத்தையும் நேரில் பார்வையிட்டார் எம்.சி. சண்முகையா. நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் உதவி பொறியாளர் நஸ்ரின் வினு, கிராம நிர்வாக அலுவலர் விஜயமூர்த்தி, கழக செயலாளர் ஜெயக்கொடி, பகுதி கழகச் செயலாளர் ஆஸ்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வி.பி.ஆர். சுரேஷ், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, ஸ்பீட் நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோரம்பள்ளம் குளமும் அத்திமரப்பட்டி மதகிலும் நீர்வரத்து கண்காணிப்பு – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் & மூத்த குடிமக்கள் நல உதவி வழங்கும் முகாம்!!
அடுத்த
தூத்துக்குடியில் PUCL தலைமையில் SIR நடைமுறை மீதும் வழக்கறிஞர் தாக்குதல்மீதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026