நாட்டின் விடுதலைக்காக தனது உயிரையும் அர்ப்பணித்த தியாகத் தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் R. அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவரின் தியாகச் செயல்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, வழக்கறிஞரான பின்னரும் சுதேசிப் போராட்ட வீரராக உயர்ந்து, கப்பலோட்டிய முதல் தமிழராக வரலாற்றில் இடம்பிடித்தவர் வ.உ.சி. அவர்களைப் பற்றி நினைவுகூர்ந்த அவர், தமிழ்மீதும் தேசமீதும் கொண்ட அவரின் அசைக்க முடியாத பற்றையைப் பாராட்டினார்.
ஆங்கிலேயர்களின் கொடுமைக்கு கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்து துன்புறுத்தப்பட்டு, அங்கு வீரமரணமடைந்த வ.உ.சி. அவர்களின் தியாகம் தமிழகத்திற்கும் தேசத்திற்கும் என்றென்றும் தலைநிமிரச் செய்வதாகவும் கூறினார்.
“அன்னாரின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளில் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து, என்றும் மக்கள் பணியில் இருப்பேன்,” என வழக்கறிஞர் R. அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்கள் தெரிவித்தார்.
தூத்துக்குடி
வ.உ.சி. நினைவு நாளில் அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை : மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வாகைகுளத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் குருபூஜை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026