தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் திருமண்டலம், ஆற்றங்கரை சேகரம் விளாத்திகுளம் தூய பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசனவிருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.வி.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் ஆற்றங்கரை சேகர குருவானவர் தினகரன், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, TDTA நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொர்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, மாரிராஜ், ராஜதுரை, விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ், தொமுச கனகரத்தினராஜ், கழக உறுப்பினர்கள் சார்லஸ், யானோக், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த அசனவிருந்து நிகழ்ச்சி, சமூக ஒற்றுமையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அசனவிருந்து வழங்கப்பட்டு, பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.