தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி மற்றும் புண்ணிய தீர்த்தம் எடுத்துச் செல்லும் 40ஆவது ஆண்டு தொடர் ஓட்ட பேரணி இன்று திருச்செந்தூரில் சிறப்பாக தொடங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியை தேசிய ஐஎன்டியூசி தலைவர் கதிர்வேல் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படையின் தலைவர் மணிகண்டன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் செல்வராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


திரளான தொண்டர் படையினர் கலந்து கொண்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதியை ஏந்தியவாறு உற்சாகமாக தொடர் ஓட்டமாக பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி பயணம் மேற்கொண்டனர். தேசபற்று, வீர உணர்வு மற்றும் தமிழர் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.