விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல முக்கியமான வளர்ச்சி பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி, ஈராச்சி கிராமத்தில் கனிமம் சுரங்க நிதியின் கீழ் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டும் பணியும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணியும் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்டது. தொடர்ந்து, கிராமத்தின் அடிப்படை வசதி குறைகள் குறித்து ஜி.வி. மார்கண்டேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன் ரத்தினகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் சங்கரபாண்டியன், ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் செந்தில்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஈராச்சி ஊராட்சி கசவன்குன்று கிராமத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணிகளும் ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் துவக்கப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள், மகளிரணி, இளைஞரணி மற்றும் பல கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விளாத்திகுளம் மதுரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ அம்பாள் ஆட்டோ ஸ்டாண்ட் புதிய கட்டிடம் ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், இராமச்சந்திராபுரம் கிராமத்தில் மறைந்த ஓய்வு தலைமையாசிரியர் தெய்வத்திரு செண்பகராமன் அவர்களுக்கு ஜி.வி. மார்கண்டேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விளாத்திகுளம் தொகுதியில் குடிநீர், சமூக வளங்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துவக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புதிய சாலை – வடிகால் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத் திட்டங்கள் விரைவில் நடைமுறை!!
அடுத்த
தூத்துக்குடியில் திமுக இளைஞர்களுக்கு ஊக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் – “முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் இளைஞர் அணி”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026