தூத்துக்குடி பிரத்தியங்கிரா பீடத்தில் மார்கழி 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை (19.12.2025) அன்று ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் சாக்தஸ்ரீ சற்குரு ஶ்ரீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
காலை 8.00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புனித அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு பிரத்தியங்கிராதேவிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, அதனுடன் மகா அன்னதானமும் நடைபெற்றது.
இந்த ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் தேவியின் தரிசனம் செய்து அருள்பெற்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுகளுடன் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி
"சாக்தஸ்ரீ" சற்குரு ஶ்ரீனிவாச சித்தர் தலைமையில் தூத்துக்குடி பிரத்தியங்கிரா பீடத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மற்றும் பிரத்தியங்கிராதேவி மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தெருநாய்கள் – சமூகப் பொறுப்பு: ரேபிஸ் இறப்புகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி – அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் கோசல்ராம் ராஜா விருப்ப மனு தாக்கல்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026