தூத்துக்குடியில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக சார்பில் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் விவிடி சிக்னல் அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய கூட்டமைப்புகள், என தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகள், சொந்தங்களுக்கு எதிரான இந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசால் நேற்று நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும்.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்து தவெக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் ஆணையின்படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி இன்று (04.04.2025) காலை விவிடி சிக்னல் அருகில் ஒன்றிய அரசை கண்டித்து பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
