மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்தும், இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தவெக சார்பில் இன்று (04.04.2025) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அறிவித்திருந்தார்.



தளபதி விஜய் அறிவித்தலின்படி மத்திய அரசால் கொண்டு வந்த வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து, மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமிய சொந்தங்களுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தவெக தலைவர் விஜய் ஆணைப்படி, பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தொழிலதிபர் ஜே.கே.ஆர். முருகன் தலைமையில், கிங்ஸ் டிவி அன்பரசன் முன்னிலையில் வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்தும், மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட திரளாக தவெகவினர் கலந்து கொண்டனர்.