மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் இன்று (04.04.2025) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி தளபதி விஜய் அறிவித்தலின்படி மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இஸ்லாமிய சொந்தங்களுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தவெக தலைவர் விஜய் ஆணைப்படி, பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில். தொழிலதிபர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ஏற்பாட்டில், அறிவுறுத்தலின் பேரில் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மரியா, ஜிடி, கிஷோர், கோல்டன், அண்டோ, காயத்ரி, திலகவதி, மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.