தூத்துக்குடியில் இன்று (03.04.2025) காலை அத்திமரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிமணி கதை வசனத்தில், பிராட்வே சுந்தரின் திரைக்கதை, இயக்கம், இசையில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரிப்பில் உயிர் மூச்சு திரைப்படம் தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில் விவசாயி ஜோதிமணி, மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி மற்றும் பிராட்வே சுந்தர் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

உயிர் மூச்சு திரைப்படம் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளுடன் ஒளிபரப்பாகின்றது. இந்த படத்தில் விஷ்ணு, ராஜ்கபூர், ஸ்டண்ட் மதுர, சிவசு, ராஜேந்திர பூபதி, தாமரை செல்வன், வக்கீல் செங்குட்டுவன், ராஜ் மாசாணம், சீலன் ஸ்ருதி, ஐ. செல்வக்குமார், ஜெரோம், சுமங்கலி சதீஷ், சேலம் சரண், வருண், உட்பட பலர் நடித்துள்ளனர்.

உயிர் மூச்சு திரைப்படம் மேளதாளத்துடன் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை கண்டு ரசித்தனர். படத்தை காண்பதற்கு திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.