தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமையில் தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று (03.04.2025) காலை நேற்று (02.04.2025) சங்கத்தின் மூலம் பொதுக் குழு கூட்டி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி. மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசனின் பணியிடம் மாற்றம் உறுதி செய்யப்பட்டதை கண்டித்தும் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் காவல்துறையை கண்டித்து, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செல்வின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலையிடாதே, தலையிடாதே வழக்கறிஞர்கள் உரிமைகளிலும், நீதி துறையிலும் தலையிடாதே, மத்திய மாநில அரசுகள் காவல்துறையின் அடக்குமுறையின் மீது நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு, கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!! காவல்துறை கண்டிக்கின்றோம்! வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் தொல்காப்பியன், பிரகாஷ், வாரியார், ரமேஷ் பாண்டியன்,எஸ்.எஸ்.பி. அசோக், முனீஸ்குமார், சிவ சங்கர், விஜய கீதா, பால குமார், அர்ஜுன், நான்சி, வினோத் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
